வீற்றிருந்த பெருமாள் ( திருமழிசை)
பல்லவி
வீற்றிருந்த பெருமாளை மனமாரத்துதித்தேன்
நாற்றிசையும் புகழ் விளங்கும் திருமழிசைத்தலத்தில்
அனுபல்லவி
சாற்றிய மலர்மாலை மணிமாலையுடனே
ஏற்றமிகு திருமகளும் நிலமகளும் உடனிருக்க
சரணம்
போற்றித்துதித்திடுமடியாரைக் காப்பவனை
சீற்றமுடன் எதிர்த்த அரக்கரை அழித்தவனை
காற்று நிலம் நீர் நெருப்பு நீள்விசும்பென
ஆற்றல் மிகுந்தவனை அழகிய கேசவனை
No comments:
Post a Comment