ஈசனொருபாகத்தவளே
பல்லவி
ஈசனொரு பாகத்து நேரிழையே உமையே
நேசமுடன் துதித்தேன் எனக்கருள்வாய் தாயே
அனுபல்லவி
பாசத்தளைகளைக் களைந்திடும் சங்கரி
கேசவன் சோதரி திரிபுரசுந்தரி
சரணம்
பாசாங்குசமும் கரும்பும் கிளியும்
தேசுடன் கரங்களில் ஏந்திடும் தேவி
பூசுரரும் வானவரும் கரம் பணிந்தேத்தும்
மாசிலாதவளே மலைமகளே கௌரி
No comments:
Post a Comment