அரங்கன் பாதுகையே
பல்லவி
அரங்கன் பாதுகையே உனதருள் வேண்டினேன்
பரந்தாமன் கேசவன் பதம்தனைத்தாங்கும்
அனுபல்லவி
வரம் தரும் கரமும் அபயகரமும் காட்டி
சுரக்கும் கருணையளித்திடும் தயாகரன்
சரணம்
இரக்கம் வைத்தென் பழவினைப் பயன்களை
நிரந்தரமாகத் தொலைந்திடச் செய்து
அரக்கரை மாய்த்திடும் அரங்கனை என்னிடம்
விரைந்தெழுந்தருளும் கோரிக்கை வைத்து
No comments:
Post a Comment