அரங்கநாதன்
பல்லவி
அந்த ரங்கநாதனை ஆராதனை செய்தேன்
அந்தரங்கம்தனிலவன் திருவடியை நினைந்து
அனுபல்லவி
சந்ததம் துதித்திடும் பக்தருக்கருள்தரும்
உந்திகமலனைக் கேசவனை மாதவனை
சரணம்
மந்தகாச வதனமுடன் திகழும்
சுந்தர வடிவினனை அரங்கத்தம்மானை
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
சிந்தையிலிறுத்தி அனுதினம் துதித்து
No comments:
Post a Comment