திருக்குடந்தை ஆராவமுதன்
பல்லவி
நாராயணனின் மலர்த் தாள் பணிந்தேன்
ஓராயிரம் நாமம் உடைய - ஶ்ரீமன்
அனுபல்லவி
காரார் குழலாள் திருமகளைத் தன் மார்பில்
பாராட்டி சீராட்டி வைத்திருக்கும் கேசவன்
சரணம்
தாராளம் பக்தருக்கு தயைபுரியும் சீராளன்
பாரோர் புகழ்ந்தேத்தும் பாற்கடல் வாசன்
சாரங்கபாணியாய் திருக்குடந்தை தலத்துறையும்
ஆராவமுதனவன் அருளமுதம் பெற வேண்டி
No comments:
Post a Comment