ஹே ராமச்சந்திரா
பல்லவி
ஹே ராமச்சந்திரா எனக்கருள் புரிவாய்
பாராதிருந்தால் எவரிடம் முறையிடுவேன்
அனுபல்லவி
ஓராயிரம் நாமமுடையவனே கேசவா
ஆராவமுதே அருந்தேனே மாதவா
சரணம்
மாறாத பக்தியுடன் துதிப்பவர்கெல்லாம்
தீராவினை தீர்க்கும் திருமாலே முகுந்தா
நாராயணனே நான்மறைகள் போற்றும்
பேராளா சீர்மல்கும் அயோத்தியர் கோமானே
No comments:
Post a Comment