திருவெள்ளறை புண்டரீகாக்ஷன்
பல்லவி
மாமறைகள் போற்றும் தாமரைக்கண்ணனை
சாமள மேனியனை வெள்ளறையில் துதித்தேன்
அனுபல்லவி
பூமகள் செண்பகவல்லியுடனிருக்கும்
கோமகனைக்கேசவனை புண்டரீகாக்ஷனை
சரணம்
பாமரரும் பண்டிதரும் சூரிய சந்திரரும்
பூமகளும் திருமகளும் கருடனுமனந்தனும்
பூமண்டலத்தோரும் வானுறை தேவரும்
மாமுனிவர் மார்க்கண்டேயரும் வணங்கிடும் ...( மாமறை..)
தாமரைமலர் நாபனை செங்கமலக்கண்ணனை
காமனையீன்றவனை கம்சனைக் காய்ந்தவனை
ஆமருவியப்பனை ஆனிறை மேய்த்தவனை
தேமதுரத் தமிழால் பாமாலை பாடி .... ( மாமறை..)
No comments:
Post a Comment