சென்ன கேசவா
பல்லவி
எப்போதும் உந்தன் திருநாமம் தனையே
செப்பிடும் வரமருள்வாய் சென்ன கேசவா
அனுபல்லவி
இப்பிறப்பிலும் இனி வரும் பிறப்பிலும்
தப்பாமலென்றுமுன் தாளினைப் பணிந்து
சரணம்
அப்பாலுக்கப்பாலும் அருகிலும் விளங்கிடும்
நப்பின்னை மணவாளா நாகத்தணையானே
இப்பிரபஞ்சமே இனிது போற்றிடும்
ஒப்புயர்வில்லா நந்தகுமாரனே
No comments:
Post a Comment