உன் பதமொன்றே.....
பல்லவி
உன் பதமொன்றே சதமென்றும் ராமா
என்றுனைப் பணிந்தேன் எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
உன் பதம் வைத்து நீ நடந்த இடமெலாம்
என்றும் திருத்தலம் எனும் புகழடைந்தன
சரணம்
உன் பதம் பட்டதும் கல்லும் பெண்ணானது
உன் பதம் தாங்கிய பாதுகையுமன்று
முடிசூடி உன் பெயரால் அரசையாண்டது
உன் திருவடி நிழலே என் துணை கேசவா
உன் பதமே அன்று மூவடி அளந்தது
உன் பதமே அந்த பிரமனும் பணிந்தது
உன் பதமே காளிங்கன் தலை மீது ஆடியது
உன் பதமே அன்னையின் கரம் பற்றியது
No comments:
Post a Comment