மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸிநீ விச்வமாத: |
க்ஷீரோதயே கமலகோமள கர்ப்பகௌரி
லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் நமதாம் ச’ரண்யே ... !!!
பொருள் : --
தாமரைப்பூவினில் வசிப்பவளே! தாமரைக் கண்களை உடையவளே! விஷ்ணுவின் இதயத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவளே! உலகின் தாயே! பாற்கடலில் உதித்தவளே! தாமரைப் பூவினை ஒத்த மென்மையான சரீரம் உடையவளே! உன்னை வணங்குபவர்களை ரட்சிப்பவளே! மகாலட்சுமி தாயே! நீ என்றும் எம்மை அனுக்ரஹிப்பாயாகுக! உன்னை நான் நமஸ்கரிக்கின்றேன்.
தாமரை மலர்தனில்....,
பல்லவி
தாமரை மலர்தனிலமரந்திருக்கும் திருமகளே
தாமரை மலர் போல கண்களை உடையவளே
அனுபல்லவி
தாமரை நாபன் கேசவன் மனம் மகிழ
அவர் திருமார்பை அலங்கரிப்பவளே
சரணம்
பாற்கடலில் உதித்த அழகிய அலைமகளே
நாற்கவிகள் புகழும் தாமரை மேனியளே
பாரினிலுன்னைத் துதிப்பவரைக் காப்பவளே
பார்கவி உனைப்ணியும் எனக்கருள்வாயே
No comments:
Post a Comment