ந ஸ்த்ரீ புமான் ந சுரதைத்ய நராதயோ ந
க்ளீபம் ந பூதமபி கர்மகுணா,தயச்ச
பூமம்ஸ்த்வமேவ ஸதநாத்ய விகார்ய நந்தம்
ஸர்வம்"த்வயா ஜகதிதம் விததம்,விபாதி
இந்த ஆதிதேவி பரப்ரம்மம். பரமாத்மா.
அவளது ரூபம் கற்பனைக்கடங்காதது.
ஆனால் அவளது ரூபத்தை மனதில் நிறுத்தி
தியானிப்பதில் இருக்கும் சுகம் அளவற்றது....
ஆனால் அவளது ரூபம் எப்படியிருக்குமென
யாராலும் கூறமுடியாது. எதுவாக இருந்தாலும்;பிரம்மமே
அது ஆரம்பமோ முடிவோ அற்றது. அதற்கு ஜனனமோ
மரணமோ இல்லை. ஆனால் ப்ரம்மம் இல்லையென்றால்
எதுவுமேயில்லை.,அத்தகைய பரப்ரம்மமாகிய அம்பிகையை
வணங்குகிறேன்..
பரப்ரம்ம ஸ்வரூபிணி என்று லலிதா ஸஹஸ்ரநாமத்தில்
அம்பாளுக்கு ஒரு நாமமுண்டு.......
அனைத்தும் நீயே.......
பல்லவி
அனைத்தும் நீயே நீயே பரமாத்மா
உனையே பணிந்தேன் லலிதாம்பிகையே
அனுபல்லவி
நினைத்துனை மனத்தில் துதித்தாலானந்தமே
ஜனன மரணமில்லாக் கேசவன் சோதரி
சரணம்
ஆணும் பெண்ணும் நரர் சுரருமல்லாத
உனது வடிவம்தனை எவரும் அறிந்திலர்
சொல்லுக்கும் கற்பனைக்கும் எட்டாத மாயையே
தொடக்கம் முடிவு இல்லாத பரம்பொருளே
No comments:
Post a Comment