கயற்கண்ணி......
பல்லவி
கயற்கண்ணி உனையே காத்தருள வேண்டினேன்
அயனரனரி பணி கேசவன் சோதரி
அனுபல்லவி
புயங்கப் பெருமான் ஒருபாகத்துறைபவளே
வியந்திடச்செய்யும் மலையரசன் மகளே
சரணம்
துயரிடர் பவப் பிணி களைந்திடும் தாயே
நயமுடன் பணிவோர்க்கு நலமளிப்பவளே
அயராதரக்கரின் விதி முடித்தவளே
உயர்வுடன் மதுரைமா நகராள்பவளே
No comments:
Post a Comment