சுராசுர சேவித பாத பங்கஜா
கரே விராஜத் கமனீய புஸ்தகா
விரிஞ்சி பத்னீ கமலாசனஸ் திதா
சரஸ்வதீ ந்ருத்யது வாசி மே சதா
அதாவது, தாமரையில் வீற்றிருப்பவளும், தேவர்கள் வணங்கும் பாதக் கமலங்களை உடையவளும், அழகிய புத்தகத்தை கரத்தில் கொண்டவளும், ஸ்ரீபிரம்மதேவரின் துணைவியுமான சரஸ்வதி தேவியே... என் வாக்கில் மகிழ்ந்து தங்குவாய்! எனும் இந்த ஸ்லோகத்தை, தினமும் சொல்லுங்கள். முடிந்தபோதெல்லாம் சொல்லுங்கள்! ஞானமும் தெளிவும் கிடைக்கப் பெறுவீர்கள். தேர்வில் வென்று வாகை சூடுவீர்கள்!
சரஸ்வதி....
பல்லவி
சரஸ்வதி உனையே தினம் பணிந்தேனே
நரர் சுரர் துதித்திடும் நாமகளே கலைவாணி
அனுபல்லவி
அரனயன் கேசவன் அனைவரும் போற்றும்
பரதேவதையே சகலகலைமாதே
சரணம்
பிரமனின் மனங்கவர் அவர்தம் துணைவியே
கரங்களிலழகிய புத்தகமும் மாணிக்க
வீணையுமேந்திடும் வாகதீச்வரி
அரவிந்த மலர்தனில் வீற்றிருப்பவளே
No comments:
Post a Comment