யதுகிரித்தாயாரை......
பல்லவி
யதுகிரித்தாயாரைக் கல்யாணி நாச்சியாரை
மேலக்கோட்டைத்தலத்தில் சேவித்து மகிழ்ந்தேன்
அனுபல்லவி
யதுகுல நந்தனன் செலுவ நாராயணன்
கேசவன் மனம் மகிழ அவன் மார்பில் விளங்கும்
சரணம்
சதுர் முகனும் நரர் சுரரும் நாரதருமிந்திரனும்
சதுர் மறையும் எதிர் நின்று கரம்பணிந்தேத்தும்
புதுப்பொலிவுடன் திகழும் புகழ்மிகு அலைமகளை
மதுர மொழியாளை நிதியளிக்கும் திருமகளை
No comments:
Post a Comment