சரவணபவகுகனே.......
பல்லவி
சரவணபவகுகனே அறுமுகனே
அரவணைத்தெனையே ஆண்டருள்வாயே
அனுபல்லவி
பரமசிவனும் உமையும் கொஞ்சிடும்
சேவற்கொடியோனே கேசவன் மருகனே
சரணம்
நரர்சுரர் சுரபதி பிரமனும் ரதிபதியும்
கரம் பணிந்தேத்தும் கார்த்திகேயனே
குறமகள் வள்ளியும் அழகு தெய்வானையும்
அருகமர்ந்து காட்சி தரும் சிங்காரவேலனே
No comments:
Post a Comment