பூனகலாஸே மனோக்ஞே புவன வனவ்ருதே நாகதீர்த்தோபகண்டேரத்னப்ராகார மத்யே ரவிசந்த்ர மஹாயோக பீடே நிஷண்ணம் ஸம்ஸார வ்யாதி வைத்யம் ஸகலஜனநுதம் சங்கபத்மார்ச்சிதாங்க்ரிம்கோமத்யம்பாஸமேதம் ஹரிஹரவபுஷம் சங்கரேசம் நமாமி
பொருள் : தாயே கோமதீஷ்வரி..!!!
பூலோக கைலாயமாகவும், மனத்தினுள்ளே எப்போதும் ப்ரகாஸிப்பதும், புன்னைவனமாக இருப்பதுவும், நாகங்களால் தீர்த்தம் அமைத்து பூஜிக்கப்பட்ட பெருமை உடையதுமான சங்கரன்கோவிலில்...
மிகவுயர்ந்த ரத்ன வகைகளினால் அலங்கரிக்கப்பட்ட ப்ரகாரங்களை கொண்ட தலத்தின் மத்தியில் ஒளிர்பவளும்..!!!
சூரியசந்திர மண்டலங்களின் மத்தியில் பூஜிக்கப்படும் மஹாயோகபீட கன்யையாக விளங்குபவளும்..!!!!
கொடுமையான பிறவிப்பிணிக்கு மருந்தாக விளங்குபவளும்..!!!
அனைத்து விதமான ஜீவராசிகளாலும் போற்றிப் புகழ்ந்து பூஜிக்கப்பட்டவளும்...!!!
சங்கன் பதுமன் என்ற நாகர்களால் சிறப்பாக பூஜிக்கப்பட்ட பாதாரவிந்தங்களை கொண்டவளும்..!!!
பரமேஷ்வரனும் திருமாலும் இணைந்த திருக்கோலமான சங்கரநாராயணருடன் காட்சி தருபவளும்...!!! சங்கரரான பரமேஷ்வரரின் பத்னியுமான சங்கரி ஸ்ரீ மத் கோமதீஷ்வரி அம்பிகையே தங்களுடைய பாதாரவிந்தங்களே சரணம்
மாமறைகள்......
பல்லவி
மாமறைகள் போற்றும் கோமதித் தாயே உன்
தாமரைப் பதங்களைச் சரணடைந்தேன்
அனுபல்லவி
பூமண்டலந்தனில் கைலாயமென விளங்கும்
சங்கரன் கோவிலெனும் திருத்தலத்தில் எழுந்தருளிய
சரணம்
ஈசனும் திருமாலும் இணைந்து காட்சி தரும்
சங்கரநாராயணனுடன் இருப்பவளே
சூரிய சந்திர மண்டலங்கள் நடுவிருக்கும்
மகாயோகபீட கன்னிகையே
உலகுயிரனைத்தும் போற்றிப் புகழ்ந்து
துதித்திடும் உத்தமியே பவப்பிணிக்கு மருந்தே
சங்கன் பதுமனெனும் நாகர்கள் துதித்திடும்
பதமலருடையவளே கேசவன் சோதரியே
No comments:
Post a Comment