வசந்த நவராத்திரி ஸ்பெஷல் !
1.ஹார நூபுர கிரீட குண்டல விபூஷிதாவயவ சோபினீம்
காரணேச வர மௌலிகோடி பரிகல்ப்யமான பத பீடிகாம்
காலகால பணி பாசபாண தநுரங்குசா மருண மேகலாம்
பாலபூதிலக லோசனாம் மநஸி பாவயாமி பரதேவதாம்
பொருள்: ஹாரம், கொலுசு, கிரீடம், குண்டலங்கள் அவயவங்களை அலங்கரிக்க பிரகாசிப்பவளும்; இந்திரன், பிரம்மா முதலிய தேவர்களின் கிரீடங்களால் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவளும்; மிகக் கருத்த நாகங்கள், பாசம், வில், அங்குசம், சிவந்த ஒட்டியாணம் ஆகியவற்றைத் தரிப்பவளும்; திலகம் போன்ற நெற்றிக் கண்ணினை உடையவளுமான பர தேவதையை மனதால் வணங்குகிறேன்.
பரதேவதையே...
பல்லவி
பரதேவதையே கேசவன் சோதரியே
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரப்பணிந்தேன்
அனுபல்லவி
நரர் சுரரிந்திரன் பிரமனின் மகுடங்கள்
சரணெனப் பணிந்திடும் திருவடிகளுடைய
சரணம்
காலிரண்டில் கொலுசும் காதிரண்டில் குண்டலமும்
மாலைகள் கழுத்திலும் கைகளில் வளைகளும்
கரு நாகம், பாசம்,வில்லங்குசம், ஒட்டியாணம்
திரு முகத்தில் நெற்றிக் கண்களுடன் விளங்கும்
No comments:
Post a Comment