த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண - ஜநிதானாம்தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் - முகுலித - கரோத்தம்ஸ-மகுடம்
சிவ பத்தினியே! உன்னுடைய திருவடிகளில் செய்யப்படுகின்ற பூஜையானது மும்மூர்த்திகளுக்கும் பொருந்தக்கூடியதாகவே ஆகிறது. காரணம், மும்மூர்த்திகளுமே உன்னுடைய மூன்று குணங்களில் இருந்து தோன்றியவர்கள்தாம். மேலும், அவர்கள் எப்போதும் உன்னுடைய ரத்னமயமான சிம்மாசனத்துக்கு அருகில், தங்களுடைய கைகளைக் குவித்து தலைக்கு மேல் வைத்தபடி நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனவே, உனக்குc செய்கின்ற பூஜை மும்மூர்த்திகளுக்கும் சேர்த்தே பூஜை செய்ததாக அமைகின்றது.
ஈசன் சிவபெருமான்.....
பல்லவி
ஈசன் சிவபெருமான் துணைவி உனையே
பூசிப்பது மூவரையும் பூசித்த தாகும்
அனுபல்லவி
வாசமலர் தூவி நேசமுடன் துதிக்கும்
அடியார்க்கருளும் கேசவன் சோதரியே
சரணம்
மும்மூர்த்திகளுமுன் மூன்று குணங்களில்
தோன்றிய தெய்வ வடிவங்களே அவர்கள்
மூவருமுந்தன் ரத்ன சிம்மாசனத்தை
சிரசில் தாங்கி நின்றிருப்பதனால்
No comments:
Post a Comment