உன்னைத் துதிக்கும்....
பல்லவி
உன்னைத் துதிக்கும் வழி தெரியாமலனைவரும்
கன்னலே ஶ்ரீராமா கமல நாபனே
அனுபல்லவி
இன்னல் தருமிந்த பூவுலகில் கேசவனே
நன்னெறியறியாமல் நாளுமுழல்கின்றார்
சரணம்
சின்னம் அணிந்து செபமாலையுருட்டி
பொன்னும் பொருளும் தேடி ஓடியலைகிறார்
இன்னும் பலவிதமாய் ஈனச் செயல் புரிந்து
தன்னலம் கருதியே சுற்றித்திரிகிறார்
No comments:
Post a Comment