மனமொரு......
பல்லவி
மனமொரு நிலையின்றி அலைபாய்வதைத் தடுத்து
அனந்தனே சென்ன கேசவா ஆதரித்தருள்வாய்
அனுபல்லவி
வனமாலை கௌஸ்துபமணிந்த மாதவனே
அனங்கனைப் பிரமனைப் படைத்த மதுசூதனனே
சரணம்
வனவிலங்கெனத் திரியும் மனக்குரங்கை யடக்க
உனையன்றி எனக்கு வேறே யார் துணை
ஜனன மரண பயம் நீங்கிடச்செய்யவும்
உனது திருவடியே சதமெனத் துதித்தேன்
No comments:
Post a Comment