மாதா கரோதி தனயஸ்ய க்ருதே சுபானி
கர்மாணி, தஸ்ய பதனே ப்ருசமேதி துக்கம்
வ்ருத்தௌ சுகம் ச: தவ கர்ம ந, நாபி துக்கம்
த்வம் ஹ்யேவ கர்மபலதா ஜகதாம் விதாத்ரீ
ஒரு செயலைச் செய்யும் போது அதனால் ஏற்படும் நல்லது, கெட்டது அனைத்திற்கும் நாமே காரணம். அந்த அந்த கர்ம பலனை நாம் அனுபவிக்க நேரிடுகிறது. இதன் காரணத்தால் துக்கம், மகிழ்ச்சி, கஷ்டம், நஷ்டம், பிரிவு, சேர்க்கை போன்ற இரட்டைகளை அனுபவிக்க நேரிடுகிறது. தேவிக்குக் கர்மபந்தக் கட்டு இல்லை. அதனால் சுகம், துக்கம் எதுவும் இல்லை. நமக்கு சுகம் தருபவள் அவள். அதனால் அவளைப் பணிவதே நமக்கு நல்வழி தரும்.
சேயென.......
பல்லவி
சேயென நமைக்காக்கும் திரிபுரசுந்தரியை
தாயவளின் மலரடியைப் பணிவதே நல்லது
அனுபல்லவி
மாயையவளே கேசவன் சோதரி
நேயமுடன் நமக்கு நல்வழி காட்டி
சரணம்
ஓயாது நாம் செய்யும் கர்ம பலன்களால்
தீயதும் நல்லதும் துக்கமும் மகிழ்ச்சியும்
மாயா உலகில் அனுபவிக்கின்றோம்
தூயவள் கர்ம வினைகளைக் கடந்தவளை
No comments:
Post a Comment