த்யாயேத தேவீம் கருணார்த்ர சித்தாம்
ப்ரஹ்மாண்ட ஸிருஷ்ட்யா,திக ஹேதுபூதாம்
ஸர்வாணி கார்யாணி விதாஸ்யதே நஹ
ஸா ஸர்வசக்தா, ஸகுணாSகுணா ச
கஷ்டம் வரும்போது நமக்கு ஆறுதல் தருபவள் தாய் தான். கஷ்டம் வந்தால் எல்லோரும் அவளிடம் தான் செல்வோம். அந்த தேவி ஸர்வ சக்தி. அவளே அனைத்திற்கும் காரணம். அவள் க்ருபாவதி. சகுணையும் நிர்குணையும் அவளே. ரூபத்துடனோ ரூபமில்லாமலோ எப்படி வேண்டுமானாலும் த்யானிக்கலாம். அவளே உலகின் தாய். மூலப்ரக்ருதி. மூன்று உலகையும் ரக்ஷிப்பவள். அசையும் அசையாத அனைத்தையும் காப்பவள். எல்லோரும் அவளை த்யானம் செய்யுங்கள். அவளைச் சரணடையுங்கள். நமக்கு வழி கிடைக்கும் என்றார் ப்ரம்மா.
துன்பம் நேர்கையில்......
பல்லவி
துன்பம் நேர்கையில் காப்பவளவளே
அன்புடனரவணைக்கும் அன்னையுமவளே
அனுபல்லவி
இன்பமளித்திடும் கேசவன் சோதரி
முன்னைப் பழம்பொருள் மூவுலகாள்பவள்
சரணம்
சகுண நிர்குண சுகுண சுந்தரி
உருவமுமருவமும் உடைய ஈச்வரி
அசையுமசையாப் பொருளுமவளே
பரதேவியவளையே சரண்டைந்திடுவோம்
No comments:
Post a Comment