காஞ்சி மாநகர்...
பல்லவி
காஞ்சி மாநகர் ராணி காமாக்ஷி நீ என்னை
வாஞ்சையுடன் காத்து ரட்சிக்க வேண்டினேன்
அனுபல்லவி
தீஞ்சுவை மாங்கனிகள் தரும் மாமரத்தடியில்
வீற்றிருந்து தவம் புரியும் கேசவன் சோதரி
சரணம்
நஞ்சுண்ட கண்டன் ஏகாம்ப்ரேச்வரன்
கொஞ்சும் துணை நீயே ஏகாம்ரேச்வரி
தஞ்சமென்றுன் பதம் பணிந்திடுமன்பர்க்கு
அஞ்சலென்றபயகரம் காட்டும் அன்னையே
No comments:
Post a Comment