வரந்தரும்.......
பல்லவி
வரந்தரும் ஆதனூர் ஆண்டளக்குமையனை
கரம் கூப்பி சிரம் தாழ்த்தி மனமாரத்துதித்தேன்
துரிதம்
நரர்சுரர் நாரதர் சுக சனகாதியர்
அரனயன் கருடன் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
சிரந்தனில் மரக்காலும் கரந்தனில் ஒலையும்
எழுத்தாணியும் ஏந்தும் பரமபத நாதனை
சரணம்
நரசிம்மனாய்த் தோன்றி இரணியனை வதைத்த
பரமனைக் கேசவனை வைகுந்தவாசனை
கரன் முரனரக்கரை அழித்த ஶ்ரீராமனை
அரவணை துயிலும் ஶ்ரீமன் நாராயணனை
No comments:
Post a Comment