கருணைக்கடலே....
பல்லவி
கருணைக் கடலே காமாக்ஷி
கமலா மனோகரி திரிபுர சுந்தரி
துரிதம்
முருகன் கணபதி நந்தி கணங்கள்
பிரமன். நாரதரனைவரும் வணங்கிடும்
அனுபல்லவி
திருவிளையாடல் செய் சுந்தரேசன்
ஏகாம்ரேச்வரன் மனங்கவர்
சரணம்
ஒரு நாளும் உன் நாமம் உரைத்திலேன்
உனையே என்றும் மனத்தில் நினைத்திலேன்
பொருள் புகழ் போகமே வாழ்வெனக் கருதி
இருளில் மூழ்கி அனுதினம் உழன்றேன்
வருந்தியே மனம் திருத்திய என்னை
அருள் கூர்ந்து பிழை பொறுத்தாட்கொள்ள வேண்டும்
திருமகளும் கலைமகளும் நேசமுடன் பணியும்
பெருமைக்குரியவளே கேசவன் சோதரி
No comments:
Post a Comment