ஶ்ரீசக்ரபீடத்தில்......
பல்லவி
ஶ்ரீசக்ரபீடத்தில் வீற்றிருக்கும் தாயே ஶ்ரீலலிதாம்பிகையே
நேசமுடன் துதிக்கும் அன்பர்களுக்கருளும் மாசற்ற புவனேச்வரி
அனுபல்லவி
ஈசன் மேகநாதன் மனம் விரும்பிப்போற்றும் கேசவன் சோதரி
பாசத்தளைகளைக் களந்திடும் அன்னையே ஶ்ரீசாமுண்டீச்வரி
சரணம்
முத்துநகையும் செம்பவளவாயும் திகழ் மரகதமேனியளே
சித்தத்தில் இருத்தி சிந்திப்பவர்க்கு தித்திக்கும் மாணிக்கமே
எத்திசையும் சொலிக்கும் புஷ்பராக மணிமாலையணிந்தவளே
மொத்தத்தில் வைரவைடூரியம் கோமேதகம் நீலமெனும் ரத்தினமே
தாளம்: துருவதாளம்
No comments:
Post a Comment