நீயருள்வாய்.....
பல்லவி
நீயருள்வாய் காமாக்ஷி
காஞ்சிபுரம் வளர் ஏகாம்ரேச்வரி
அனுபல்லவி
தாயே இவ்வுலகில் உன்னையன்றி
வேறே யார் துணை கேசவன் சோதரி
சரணம்
காயமிது பொய்யென்னும் மெய்யுணர வேண்டியும்
மாயையகலவும் மன இருள் நீங்கவும்
ஓயாது உன் நாமம் பாராயணம் செய்தேன்
தாயே உன் மலரடி தஞ்சமடைந்தேன்
No comments:
Post a Comment