கருணையின்....
பல்லவி
கருணையின் திருவுருவே கேசவனே
சரணடைந்தேன் உந்தன் திருவடியை
அனுபல்லவி
திருமகள் செங்கமலம் உடன் தோன்றி
தரும மிகு சென்னையில் காட்சி தரும்
சரணம்
கலியுகந்தன்னில் கண்கண்ட தெய்வம்
உனையன்றி வேறு யார் பூமியில் உள்ளார்
இருவினைப் பயன்நீக்கி என் வழ்வில்
அருளொளி பெறவே உனையே துதித்தேன்
No comments:
Post a Comment