சந்திரசேகரனை....
பல்லவி
சந்திரசேகரனை மனமாரத்துதித்தேன்
இந்தின் இளம் பிறை சூடிய சிவனை
துரிதம்
இந்திராதி தேவரும் கணங்களும் நந்தியும்
கந்தன் கணபதி பார்வதி போற்றும்
அனுபல்லவி
அந்தமுமாதியும் இல்லா அருணாச்சலனை
அயனரி காணா அடிமுடி உடையானை
சரணம்
தந்தையும் தாயும் குருவும் அவனென
முந்தைய பழவினைப் பயன்கள் தொலைந்திட
சிந்தையில் சந்ததம் திருநாமம் நினைந்து
வந்தனை புரிந்து கேசவன்நேசனை
No comments:
Post a Comment