அகிலாண்டேஸ்வரி.......
பல்லவி
அகிலாண்டேஸ்வரி மலர்ப் பதம் பணிந்தேன்
இகபரமிரண்டிலும் சுகமளிப்பவளே
துரிதம்
புகழ்மிகு ஆனைக்காவெனும் தலத்தில்
சகலரும் வணங்கிட வந்தமர்ந்தவளே
அனுபல்லவி
புகலிடம் வேறொன்றறியேன் அகிலம்
அனைத்தையும் காத்திடும் அன்னையே உமையே
சரணம்
சுகசனகாதி முனிவரும் தேவரும்
மகபதியும் விதியும் பணிந்திடும்
மகிஷாசுரமர்த்தினி சங்கரி
சகம் புகழும் சென்னகேசவன் சோதரி
No comments:
Post a Comment