சாமுண்டேச்வரியின்....
பல்லவி
சாமுண்டேச்வரியின் பாதகமலங்களை
சரணடைந்தேன் பவ வினைகளைக் களைந்தேன்
அனுபல்லவி
பாமணியாறும் வயல்களும் சூழ்ந்த
பூமண்டலந்தனில் புகழுடன் விளங்கிடும்
சரணம்
சதுரங்கவல்லப நாதன் சிவனும்
கற்பகவல்லியும் ராஜராஜச்வரியும்
நேசமுடன் அருகிருந்து பாசமுடன் போற்றும்
ஆதிபராசக்தி கேசவன் சோதரி
No comments:
Post a Comment