மாமரத்தின்......
பல்லவி
மாமரத்தின் கீழமர்ந்து மாதவம் புரிந்திடும்
காமகோடி காமாக்ஷி கனிந்தருள் புரிவையே
துரிதம்
பாமரர் பண்டிதர் நரர்சுரர் நாரதர்
காமன் பிரமனிந்திரன் வணங்கிடும்
அனுபல்லவி
தேமதுரத் தமிழால் பாமாலை புனைந்து
வாயாரப் பாடி மனமாரத் துதித்தேன்
சரணம்
மந்தையில் திரிந்திடும் ஆடுபோல் மதிமயங்கி
நிந்தை புரிந்திடும் நீசர் வழி சென்றிடும்
எந்தனைத் திருத்தி உன் தயை அளித்திட
வந்தனை புரிந்தேன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment