அன்னையே......
பல்லவி
அன்னையே உன்னையே சரணடைந்தேன்
என்னை ரட்சிக்க வேண்டுமென காமாக்ஷி
அனுபல்லவி
முன்னை யான் செய்த பிழைகள் எத்தனையோ
அத்தனையும் பொறுத்து ஆட்கொள்ள வேண்டியே
சரணம்
தன்னலம் மட்டுமே வாழ்வினில் நாடினேன்
நன்னலம் பிறர் நலம் பேணாதொழிந்தேன்
இன்னல்கள் வந்ததும் மனம் திருந்தியே
உன்னருள் வேண்டினேன் கேசவன் சோதரி
No comments:
Post a Comment