எல்லையில்லா......
பல்லவி
எல்லையில்லாக் களிப்புடனே ஒருகாலைத் தூக்கி
தில்லையில் நடமாடும் நடராஜன் துணை
அனுபல்லவி
தொல்லை துயர் துடைப்பான் தக்கிட தரிகிட
தகதிமி தளாங்கு தகதரிகிடதக
திமிதளாங்குதக தரிகிடதகதிமி
தரிகிடதகதிமி தகதிமி தோமென
சரணம்
ஆதியந்தமில்லாத ஜோதியவன்
பாதியந்த உமைக்கீந்த நாயகன்
அம்மையும் அப்பனுமவனே அரனே
இம்மையும் மறுமையும் காப்பவனவனே
நன்மையும் தீமையும் அவனே சிவனே
நான்மறை மூலமும் தந்தவனவனே
வானுறை தேவரும் பிரமனும் கேசவனும்
கானுறை முனிவரும் பணிபவனுமவனே
No comments:
Post a Comment