பதம் பணிந்தேன்.....
பல்லவி
பதம் மணிந்தேன் உமா மகேச்வரி
பரிந்தருள் புரிந்திட வேண்டியே உன்றன்
அனுபல்லவி
இதம் தரும் இமவான் புத்ரி கௌரி
சதமென்று நம்பியே நிதமுனைத் துதித்துன்
சரணம்
கலைமகள் அலைமகள் கனிவுடன் நேசிக்கும்
மலைமகளே கபாலீச்வரன் மனங்கவரும்
மயிலைக் கற்பகமே சயிலேந்திரன் மகளே
கலியுக அற்புதமே கேசவன் சோதரி
No comments:
Post a Comment