தரும மிகு......
பல்லவி
தரும மிகு காஞ்சியில் பெருமையுடன் வீற்றிருக்கும்
அன்னையே காமாக்ஷி உன்னையே பணிந்தேன்
அனுபல்லவி
திருமகள் கலைமகள் விரும்பித் துதித்திடும்
அருந்தவச் செல்வி கேசவன் சோதரி
சரணம்
பொங்கரவம் அணிந்த சங்கரனும் பிரமனும்
திங்களும் ஞாயிறும் துதித்துப் போற்றும்
மங்களம் தரும் அங்கயற்கண்ணி
எங்களைக் காத்தருள் சங்கரி கௌரி
No comments:
Post a Comment