நாயகியே.....
பல்லவி
நாயகியே லோக நாயகியே
அகில லோக நாயகியே
அனுபல்லவி
( முதலில் அனுபல்லவியில் ஆரம்பித்துப்பாடவும்)
தாயுனையே தஞ்சமென்று
சேயெனவே எனை நினைந்து
ஆவலுடன் நாவலூரை நாடி வந்தேன்
புகழ் பாடி நின்றேன்
சரணம்
வலம் வந்துன் தலம் வந்தென் குலம் தழைக்க
உளம் உவந்துன் உளம் கனிய உருகி நின்றேன்
அலங்காரவல்லி நீ ஆனைக்காவில் வளர்
அகிலாண்டேச்வரி அருள்புரிவாயே