அச்சுதா.......
பல்லவி
அச்சுதா அனந்தா கோவிந்தா வென்றே
இச்சையுடன் அழைத்தேன் கேசவா வருவாய்
அனுபல்லவி
பிச்சியென ஊரார் பழித்தாலுமஞ்சேன்
மெச்சியுனைப் பாடி மேனி சிலிர்த்தேன்
சரணம்
நச்சரவணை மீது துயிலும்
நாரணன் நாமமொன்றே போதும் வேறு
எச்சுவை பெரினும் வேண்டேன்
கீர்த்திமிகு சென்னை மாநகருளானே
தாளம்: க.சாபு
இந்தப் பாடல் ஜார்ஜ் டவுன் சென்ன கேசவப் பெருமள்
சன்னதியில் எழுதி பெருமாளுக்கு அர்ப்பணம் பண்ணியது.
என்னோட வாழ்க்கையிலே பெருமாள் அனுக்ரகம் பண்ணின
அற்புதமான தருணம்.
நாராயண நாராயண நாராயண ஃ🙏ஃ
No comments:
Post a Comment