தாமிர சபைதனில்....
பல்லவி
தாமிர சபைதனில் களிநடம் புரிந்திடும்
நடராஜ பெருமானைப் பணிவாய் மனமே
துரிதம்
மாமறையோதும் வேதியர் ஞானியர்
பாமரர் பண்டிதர் கேசவன் வணங்கிடும்
அனுபல்லவி
பூமியில் அனைவரும் கண்டு மகிழ்ந்திட
தோம் தோம் தோமென ஜதியுடனிசையுடன்
சரணம்
காலினில் பாத சதங்கைகளாட
காதினில் மகர குண்டலமாட
கழுத்தினில் நவமணி மாலைகளாட
கைகளிலேந்திய உடுக்கையுமாட
அரைதனிலழகிய புலித்தோலாட
மான் மழுவாட முயலகனாட
செஞ்சடை மீது மதி புனலாட
மத்தளம் கொட்டும் நந்தியுமாட
பக்கத்தில் நின்று கணங்களுமாட
வேதங்கள் ஓதிடும் வேதியராட
பதஞ்சலி வியாக்ரபாதருமாட
முப்பத்து முக்கோடி தேவருமாட
பிரமனிந்திரன் முனிவருமாட
பாலகணபதி முருகனுமாட
கோலவிழியன்னை சிவகாமியாட
காணுமடியாரனைவருமாட
No comments:
Post a Comment