அன்னையே........
பல்லவி
அன்னையே காமாக்ஷி உன்னைப் பணிந்தேன்
என்னை இனிது காத்தருள வேண்டுமென
துரிதம்
நரபதி நான்முகன் நாரதர் நரர்சுரர் அலைமகள் கலைமகள்
அனைவரும் வணங்கிடும் அகிலாண்டேச்வரி திரிபுரசுந்தரி
அனுபல்லவி
பன்னாகாபரணன் ஏகாம்ரேச்வரன்
பன்னகசயனன் கேசவன் போற்றும்
சரணம்
மன்னுயிர்க்கெல்லாம் மோட்சம் தருபவளே
முன்னம் ஈசனுக்கே அன்னம் படைத்தவளே
இன்னமாதி சங்கரர்க்கருளளித்தவளே
கன்னலே அமுதே காஞ்சிமாநகர் வளர்
No comments:
Post a Comment