கலைவாணியே.......
பல்லவி
கலைவாணியே உந்தன் கழல் பணிந்தேன்
கலைஞர்கள் போற்றிடும் சரச்வதி அன்னையே
துரிதம்
புலவரும் அரசரும் தேவரும் முனிவரும்
நாரதர் நான்முகன் அனைவரும் வணங்கிடும்
அநுபல்லவி
கலைகளும் கல்வியும் எனக்கருள வேண்டி
பலவிதமாயுன்னை ப்பாடித் துதித்து
சரணம்
நான்மறையோதும் வேதியர் துதிக்கும்
நாமகளே நல்வாக்கருளும் கலைமகளே
பாமரர் பண்டிதர் அலைமகள் மலைமகள்
கேசவன் சுகசனகாதியர் போற்றும்
No comments:
Post a Comment