கண்ணன் லீலைகளை......
பல்லவி
கண்ணன் லீலைகளை காதாரக் கேட்டாலும்
எண்ணி மனத்தினில் நினைத்தாலும் போதும்
அனுபல்லவி
புண்ணியம் ஒரு கோடித் தானாகச் சேரும்
மண்ணில் பிறந்த பாக்கியம் கிடைத்திடும்
சரணம்
தீர்த்த யாத்திரை நேர்த்திக்கடன்கள்
மதித்தல் நீட்டல் வழிபாடு வேண்டாம்
யாகம் ஜபம் தபம் எதுவும் வேண்டாம்
கேசவன் நாம கீர்த்தனம் ஒன்றே போதும்
தாளம்: க.ஜம்பை
No comments:
Post a Comment