கண்டேன் ......
பல்லவி
கண்டேன் பத்மநாபனை அனந்தபுரம் பதிதனில்
கலியுகம் நலம் பெற அவதரித்தவனை கேசவனை
அனுபல்லவி
பண்டொருநாள் மூவடியால் உலகம் அளந்தவனை
இன்றும் நமக்கிரங்கி இங்கு கோயில் கொண்டவனை
சரணம்
விண்ணாளும் இந்திரனும் சனகாதி முனிவர்களும்
மண்ணுலக மாந்தரும் நாரதரும் நான்முகனும் சிவனும்
எந்நாளும் எப்போதும் பணிந்தேத்தும் அனந்தசயனனை
கண் குளிரக் காட்சி தரும் அழகுத் திருமேனியை
தாளம்: மிச்ர த்ரிபுடை
No comments:
Post a Comment