வடிவுடை அம்மனின்....
பல்லவி
வடிவுடை அம்மனின் திருவடி பணிந்தேன்
ஒற்றியூர் புற்றீசன் போற்றும் தகவுடைய
அனுபல்லவி
அடியவர் படுந்துயரனைத்தையும் களைந்திடும்
கொடியிடைத் திருவுடை நாயகியென விளங்கும்
சரணம்
கவிதையில் இசையில் சுருதியென ஒலிப்பவள்
இயலிசை நாடகக்கலா வடிவினள்
கல்வியின் கலைகளின் ஆதாரநாயகி
வல்லமையளித்திடும் கேசவன் சோதரி
No comments:
Post a Comment