அருள் தரும்........
பல்லவி
அருள் தரும் அன்னையே கற்பகமே
கருணைக் கடலே உன்றன் கழல் பணிந்தேன்
துரிதம்
இருகரம் கூப்பி தேவரும் முனிவரும்
தேவேந்திரனும் சிங்காரவேலனும் பிரமன்
கணபதி நந்தியும் கணங்களும் நவக்
கிரகங்களும் போற்றித் துதித்திடும்
அனுபல்லவி
திருமயிலைப் பதிதன்னில் சயிலேந்திரன் மகளாய்
உருவெடுத்த பரிமளமே கேசவன் சோதரி
சரணம்
நிலமகள் கலைமகள் வணங்கிடும் பதத்தினளே
உலகுயிரனைத்தையும் படைத்தும் காத்தும்
அலகிலா நாடகம் நடத்திடும் ஈச்வரியுன்
அருளினைப் பெறவே அனுதினம் துதித்தேன்
No comments:
Post a Comment