காளிகாம்பாள்....
பல்லவி
காளிகாம்பாள் தாளினைப் பணிந்தேன்
தீவினையழிந்து நல்வினை பெருகிட
துரிதம்
தேவரும் மூவரும் திங்களும் ஞாயிறும்
பாரதி திருமகள் அனைவரும் துதித்திடும்
அனுபல்லவி
கோள்கலொன்பதும் எண்திசை பாலரும்
அண்டசராசரங்களனைத்தும் போற்றும்
சரணம்
படைத்தல் காத்தல் அழித்தலாகிய
முத்தொழில் புரிந்திடும் வித்தகி உத்தமி
பக்தருக்கிரங்கிடும் கேசவன் சோதரி
பாரோர் வணங்கிடும் அன்னை பராசக்தி
தாளம்: கண்டஜம்பை
No comments:
Post a Comment