அங்கையற்கண்ணி....
பல்லவி
அங்கயற்கண்ணி உன்றன் பங்கயப் பதம் பணிந்தேன்
மங்களம் தந்தருள்வாய் மதுரை வாழ்
அனுபல்லவி
சங்கத்தமிழ் போற்றும் சங்கரன் பங்கிலுறை
மலையத்வசன் போற்றும் மாதவமே மீனாக்ஷி
சரணம்
எங்கும் நிறை சோமசுந்தரேச்வரரும்
பங்கயநாபனும் கமலாலயனும்
செங்கமலவல்லியும் கலைவாணியும் பணியும்
சங்கரி. பார்வதி கேசவன் சோதரி
தாளம்: கண்டமட்யம்
No comments:
Post a Comment