கேசவா வா......
பல்லவி
கேசவா வா என்றன் வினை தீர்க்க வா
நேசமுடன் பணிந்தேன் மாதவா வா
அனுபல்லவி
ஈசன் மகேசன் நேசனே வா
நீசன் கம்சனை அழித்தவா வா
சரணம்
பாசத்தளைகளைக் களைந்திட வா வா
வசமலர்கள் சூடியவா வா
மாசிலாமணியே வா முரளீதரா வா
பேசும் தெய்வமே வா வேங்கடவா வா
அரனயன் பணிந்திடும் பரமனே வா
நரர்சுரர் போற்றும் தேவாதி தேவா வா
கரதூஷணரை அழித்தவனே வா
பரசுபாணி கர்வம் தீர்த்தவனே வா
No comments:
Post a Comment