சுந்தர வடிவினனே .......
பல்லவி
சுந்தர வடிவினனே தசரத நந்தனனே
சந்ததம் உந்தன் திருவடி பணிந்தேன்
அனுபல்லவி
வந்தனை புரிந்திடும் எந்தனைக் காத்தருள
உந்தனுக்கின்னும் தாமதம் ஏனோ
சரணம்
முந்தைய பழவினைப் பயன்களால் உலகில்
சொந்த பந்தமே சதமென நினைந்து
மந்தமதியாலுழன்று திரிந்தேன்
அந்தகனெனையே ஆண்டருள வேண்டி
No comments:
Post a Comment