நாராயணனின்..........
பல்லவி
நாராயணனின் நாமமே உரைத்திடும்
நாரத முனிவரின் அருள் வேண்டித்துதித்தேன்
அனுபல்லவி
பாரோரனைவரும் கீதையில் கேசவனும்
நீரே சத்குருவென்று போற்றிப் புகழ்ந்திடும்
சரணம்
தாரகைகள் நடுவே அழகுடன் ஜொலித்திடும்
பூரணநிலவின் பொலிவுடையவரும்
வானுறை தேவரும் முனிவருமனைவரும்
தேவமுனியென மதித்துக் கொண்டாடிடும்
No comments:
Post a Comment